மாரடைப்பால் இறந்த தனுஷ் பட நடிகர் ஜெயபிரகாஷ் !!

actor jayaprakash died: சமீப காலமாக திரைத்துறையில் பல முன்னணி பிரபலங்கள் மரணம் அடைந்து வருகிறார்கள். அதுவும் முக்கியமாக கொரோனா என்ற பிரச்சனை எப்பொழுது ஆரம்பித்ததோ அதிலிருந்துதான் பலர் இறந்து வருகிறார்கள். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வட்டாரங்கலுக்கும் இடையே பெரும் சோகத்தை அழுத்தி உள்ளது.

அந்த வகையில் தற்போது நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி இவருக்கு 74 வயது ஆகும் நிலையில் குண்டூரில் மாரடைப்பால் இன்று காலை மரணம் அடைந்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் ஆஞ்சநேயா என்ற திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானாலும் சூர்யாவுடன் ஆறு, தனுஷ்வுடன் உத்தமபுத்திரன் போன்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பிரபலமானார்.

இவர் காமெடி நடிகராகவும், வில்லனாகவும், நடிகராகவும் திரை உலகில் முன்னேறி கலக்கி வந்தார். இந்த நிலையில் இவரின் மரணம் குடும்பத்தினரையும், சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் பல பிரபலங்கள் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment