தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் ஜெயம் ரவி.
இவருடைய முதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றினை தந்தது இந்த திரைப்படத்தினை ராஜா இயக்கியிருந்த நிலையில் ஜெயம் ரவியை தொடர்ந்து சதா, நளினி மற்றும் ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கி இருந்த இந்த படம் குறித்த உண்மையை பல வருடங்களுக்குப் பிறகு ஜெயம் ரவி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாக்கி வரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. அந்த வகையில் தற்போது இவளுடைய நடிப்பில் அகிலன் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.
மேலும் இவர்களைத் தொடர்ந்து தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ், உத்தமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளில் பட குழுவினர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி ரிலீஸ்சாக உள்ளது.
அகிலன் படத்திற்கு சாம்சியஸ் இசையமைத்துள்ளார் விவேக் ஆனந்த் சந்தோஷம் ஒளிப்பதிவில், கணேஷ் குமார் படத்தொகுப்பில் ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இவ்வாறு பிரமாண்டமாக உருவாகியுள்ள அகிலன் திரைப்படம் முழுக்க முழுக்க கடல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி உள்ளதாகவும் பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் ஜெயம் ரவி அகிலன் பட செய்தி வாசிப்பாளர் சந்திப்பில் ஜெயம் படத்தில் எனக்கு டூப் போட்டவர் மைக்கேல் மாஸ்டர் சுவர் மேல சைக்கிள் ஓட்டுவது எல்லாம் அவர்தான் பண்ணாரு பல வருஷம் ஆயிடுச்சு உண்மையை சொல்லிடலாம் படத்துல பாதி அவர் தான் பண்ணாரு மீதிதான் நான் பண்ணுனேன் எனது படத்தில் பாதி தான் நாடிச்சேன் என ஜெயம் ரவி கூறி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.