தமிழ் சினிமாவில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ஜெயம்ரவி இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெஙகும் மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகி நூறு நாட்களை தாண்டி சாதனை படைத்த திரைப்படங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா.
ஜெயம் திரைப்படம் ஆனது ஜெயம் ரவியின் அறிமுக திரைப்படம் ஆகும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை சதா நடித்துள்ளார் மேலும் இத் திரைப்படத்தை இயக்கியவர் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா அவர்கள் தான்.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் அசின் நதியா பிரகாஷ் விவேக் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் தான் இயக்கியிருந்தார்.

சந்தோஷ் சுப்ரமணியம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி கொண்டது மட்டுமில்லாமல் இத்திரைப்படம் காதல் சம்பந்தப்பட்ட திரைப்படமாக இருப்பதன் காரணமாக பலரும் இந்த திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்கள் மேலும் இத்திரைப்படத்தில் ஜெனிலியாவின் நடிப்பு மிக சிறப்பாக அமைந்திருக்கும்.

பேராண்மை திரைப்படமானது இயக்குனர் ஜனநாதன் இயக்கிய திரைப்படம் ஆகும் இத்திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் மாபெரும் வெற்றியை பெற்று சாதனை படைத்தது.

தனி ஒருவன் திரைப்படம் ஆனது ஒரு தனித்துவமான வெற்றியை கொடுத்தது இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா மற்றும் வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார் இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி அவர்கள் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.

மிருதன் திரைப்படம் ஆனது ஆங்கிலத் திரைப்படத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி கதை தேர்வில் மிக சிறப்பாக தன்னுடைய திறமையை வெளிக் காட்டி வருகிறார்.