லோகேஷ் கனகராஜின் படத்தை தவற விட்டதால் அடுத்தடுத்த தோல்வியை சந்தித்த பிரபல நடிகர்.! இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்..

lokesh-kanagaraj
lokesh-kanagaraj

தமிழ் சினிமாவில் தற்பொழுது பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே இவருடைய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர்களுக்கும் மிகப்பெரிய மார்க்கெட் கிடைத்து வரும் நிலையில் பல நடிகர்கள் இவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் தற்போது விஜயை வைத்து லி யோ திரைப்படத்தினை இயக்கி வருகிறார். மேலும் இதற்கு முன்பாக கைதி, விக்ரம் இரண்டு திரைப்படங்களும் திட்டமிட்டபடி மிகப்பெரிய நடிகர்களின் கூட்டமைப்பில் வெளியாகி வெற்றினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பட வாய்ப்பை தவறவிட்ட நிலையில் அந்த நடிகர் தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்பொழுது முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி கிட்டத்தட்ட ஐந்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் தற்போது அகிலன் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜெயம் ரவி லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்தினை முடித்துவிட்டு தனக்கு ஒரு கதையை கூறியதாகவும் ஆனால் அந்த சமயத்தில் தவிர்க்க முடியாத காரணங்களினால் அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதன் பிறகு தன்னுடைய நடிப்பில் வெளிவந்த அடுத்த அடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தது. எனவே லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர் போன்ற படங்களை பார்த்துவிட்டு தெரியாமல் அந்த பட வாய்ப்பு தவற விட்டு விட்டோம் என வருத்தமடைந்ததாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.