தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் இருந்து வந்தவர்தான் நடிகர் ஜெய்சங்கர் இவரை ஜேம்ஸ் பாண்ட் என ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இவ்வாறு அவரை இப்படி அழைப்பதற்கு காரணம் என்னவென்றால் இவர் போலீஸ் மற்றும் டிடெக்டிவ் கேரக்டரில் அதிகம் நடிப்பது வழக்கம்.
அந்த வகையில் இவர் நடித்த காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற மிகப் பிரபலமான நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தபோதே தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார் அந்த வகையில் இவர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இவருக்கு சம்பளம் மிகக்குறைவாக கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு சில நூறுகள் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் நல்லதுக்கு காலமில்லை என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது இவருக்கு வெறும் 5 ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாக ஸ்ரீபிரியா அவர்கள் நடித்திருந்தார் அப்பொழுது அவருக்கு மூன்று ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இதை எப்படி நம்புவது என பலரும் ஆச்சரியத்தில் இருந்தாலும் ஆனால் இதுதான் உண்மை.
இது மட்டுமில்லாமல் இந்த திரைப் படத்திற்கான மொத்த பட்ஜெட் கூட 50000 தாண்டவில்லை அந்த வகையில் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு திரைப்படங்களும் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ஆனால் தற்போது குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்படும் திரைப்படங்களே கோடிக்கணக்கில் செலவாகி வருகிறது.
முக்கிய காரணம் நடிகர்கள் தங்களுக்கு தேவையான சாப்பாடு கேரவன் என அனைத்தையும் தனித்தனியாக எதிர்பார்ப்பது மட்டுமில்லாமல் அதிகப்படியான படப்பிடிப்புகள் வெளிநாட்டில் எடுக்கப்பட்டு வருகிறது ஆனால் அந்த காலத்தில் நடிகர்கள் மிக சாதாரணமாக இருந்தாலும் மிக குறைந்த செலவில் படம் எடுக்கப்பட்டு அதிக வசூலை வென்றார்கள்.