வளர்ந்து வரும் நடிகை உடன் நெருக்கம் காட்டும் நடிகர் ஜெய்..! யார் அது தெரியுமா.?

jai

தமிழ் சினிமா உலகில் பல்வேறு சிறந்த படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ஜெய். இவர் முதலில் விஜய் நடிப்பில் உருவான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த சுப்பிரமணியபுரம்.

மற்றும் எங்கேயும் எப்பொழுதும், சென்னை 600028, ராஜா ராணி, வலியவன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு இவர் பல்வேறு படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் நினைத்த அளவுக்கு வெற்றியை தராமல் போனதால் தற்போது நடிகர் ஜெய் மார்க்கெட் குறைந்து கொண்டே இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இவர் கிசுகிசுக்களிலும்  சிக்கிக் கொள்வது வழக்கம் இவர் நடிகை அஞ்சலியுடன் நெருங்கி பழகி லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து தற்போது இருக்கின்றனர் இந்த நிலையில் நடிகை வாணி போஜன் உடன் தற்பொழுது லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

வாணி போஜன் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை அள்ளி வருகிறாராம் இன்னும் பட வாய்ப்புகள் வந்த வண்ணமே இருக்கிறதாம் இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லும் போது நடிகர் ஜெய்யும் அருகில் இருப்பதாக சொல்லப்படுகிறது அதனை பார்த்துவிட்டு ஒரு சில இயக்குனர்கள் பிறகு கதை சொல்கிறேன் என போய் விடுகிறார்களாம்.

வாணி போஜன் எங்கு போனாலும் ஜெய் வருவதாக ஒரு பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது இதனால் ரசிகர்கள் ஒரு பக்கம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகை அஞ்சலி சூப்பராக வந்து கொண்டிருந்தார் அவர்களுடன் உங்களது பெயர் அடிபட்டு வந்த உடனையே அவரது மார்க்கெட் அவ்வளவுதான் குளோஸ் அதே போல இப்போது வாணிபோஜனின்  மார்க்கெட்டும் குறைந்து விடுமோ என்கின்ற பயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.