ரஜினியின் ஜெயிலர் பட வாய்ப்பால் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு போவாரா நடிகர் ஜெய்.! இவர் சினிமாவில் வளராமல் இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம்..

jai
jai

2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பகவதி இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்‌ தான் நடிகர் ஜெய்.இவர் தன்னுடைய நண்பர்களின் உதவியோடு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் மேலும் இவ்வரிசை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வந்த இவர் சென்னை 28 இல் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

மேலும் சுப்ரமணியம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது இப்படிப்பட்ட நிலையில் இவர் சில தவறான பழக்கங்களில் ஈடுபட்டு வந்ததால் முக்கிய இயக்குனர்களின் படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை இழந்தார் என கூறப்படுகிறது. இந்த வகையில் ஏராளமான காதல் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட இவர் அஞ்சலியுடன் சேர்ந்து சுற்றியதும் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் அஞ்சலி ஜெய் இருவரும் திருமணமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்து விட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் சில திரைப்படங்களில் மட்டும் நடித்த நடித்து வந்தார் ஆனால் அந்த படங்களும் வெற்றியை பெறவில்லை. இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா நடிக்கும் ஐந்தாவது திரைப்படத்தில் இவர் வேண்டுமென நயன்தாரா சிபாரிசு செய்திருந்தார்.

அதனை அடுத்து தற்பொழுது இவருக்கு ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது ‌‌. மேலும் இவர் இந்த வாய்ப்பினை எவ்வளவு சரியாக பயன்படுத்திக் கொள்வாரோ அதனை வைத்து தான் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த நிலையில் சமீபத்தில் அறம் பட இயக்குனர் ஜெய் ஒரு மணி நேரம் டெஸ்ட் எடுத்தாராம். எனவே ஜெய் மிகவும் அருமையாக நடித்ததால் தன்னுடைய அடுத்த படத்தில் ஜெய்யை கதாநாயகனாக நடிக்க வைக்க இருக்கிறாராம் மேலும் அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.