ரஜினிக்கு தலைவலி கொடுக்கும் நடிகர் ஜெய் – மிரட்டலாக உருவாகும் ஜெயிலர் படம்..!

jailer
jailer

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் உடன் முதல் முறையாக கை கோர்த்து நடித்து  வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படம் ரஜினிக்கு 169 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் ஒரு வயதான தோற்றத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது என சொல்லப்படுகிறது இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதாவது இந்த படத்தில் நடிகர் ஜெய் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது இந்த படத்தில் அவருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்தும் தகவல்கள் கசிகின்றன. அதாவது வேட்டை மன்னன் படத்தை நெல்சன் இயக்கும்போது சிம்புவுக்கு வில்லனாக ஜெய்யை நடிக்க வைக்க திட்டம் போட்டார்.

ஆனால் அந்த படம் பாதியிலே டிராப்பானது அதனால் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஜெய்யை நடிக்க வைக்கத்தான் இந்த படத்தில் கமிட் செய்யப்பட்டதாக ஒரு பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக தமன்னா நடிப்பார் என கூறப்படுகிறது அண்மை காலமாக ஜெய் ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டி வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

அதனால் ஜெயிலர் படத்தில் நடிகர் ஜெய்யின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளவே தற்பொழுது ரசிகர்களும் மக்களும் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை இருந்தாலும் இந்த செய்தி சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.