தி ஜங்கிள் புக், லைஃப் ஆஃப் பை போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகர் இர்ஃபான் கான் காலமானார்!!

0

Actor Irrfan khan death: பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் இர்ஃபான் கான். மேலும் இவர் வோடபோன் வணிக ரீதியான விளம்பரங்களில் நடித்ததற்காகவும் அங்கீகாரம் பெற்றவர். இவர் திரைப்படத்திற்கு வருவதற்கு முன் பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பாலிவுட்டில் ரோக், ஹாசில் போன்று மேலும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹாலிவுட் படமான ஸ்லம்டாக் மில்லியனர், தி ஜங்கிள் புக், லைஃப் ஆஃப் பை படங்களின் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இர்ஃபான் கான் நியூரோ என்டோகிரைன் எனும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 53 வயது உடைய இர்ஃபான் கான் நேற்று உடல்நிலை சரியில்லாததால் மும்பையில் உள்ள கோகிலா பென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இர்பான் கானின் மறைவுக்கு உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.