என்னுடைய படம் பிட்டு படம் மாதிரி இருக்கா..? இதற்கெல்லாம் ஒரே வார்த்தையில் முடிவு கட்டிய நடிகர் ஜிவி பிரகாஷ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தான்  ஜிவி பிரகாஷ் இவர் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமின்றி நடிகரும் கூட அந்த வகையில் இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வெற்றி கண்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் பேச்சுலர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை திவ்யபாரதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு இத்திரைப்படம் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முன்வந்தார்கள்.

அந்தவகையில் பேட்டி ஒன்றில் ஜீவி பிரகாஷ் இடம் உங்கள் திரைப்படங்கள் பார்ப்பதற்கு 18 பிளஸ் திரைப்படம் போலவே அமைகிறது இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இவ்வாறு அவர்கள் கேள்விக்கு பதில் அளித்த ஜிவி பிரகாஷ் என்னுடைய திரைப்படங்களில் திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் பேச்சுலர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரொமான்டிக் திரைப்படமாக அமைந்தது அதற்காக நீங்கள் அப்படி கூறுவது தவறு இதுவரை நான் 19 திரைப் படங்களில் நடித்துள்ளேன்.

மேலும் இந்த திரைப்படங்கள் பார்ப்பதற்கு  அதுபோன்ற பாணியில் உங்களுக்குத் தென்பட்டால் தற்போது நான் நடித்து கொண்டிருக்கும் ஜெயில் திரைப்படம் அந்த  கரையை நீக்கும் என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். ஏனெனில் ஜெயில் திரைப்படமானது சமூகத்திற்கு கருத்து தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படமாகும்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தினை படக்குழுவினர்கள் மற்றும் ஜீவி பிரகாஷ்  மலைபோல நம்பியிருப்பது மட்டுமில்லாமல் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இருந்து வருகிறார்கள்.

gv-prakash-2
gv-prakash-2