பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணமா? நாள் குறித்த பெற்றோர்கள்..

Actor kavin: சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் கலக்கி வரும் ஏராளமான பிரபலங்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகராக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து தற்பொழுது தொடர்ந்து ஹிட் படங்களை தந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகர் கவின்.

இவர் சீரியல் நடிகர் மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த நிலையில் இதன் மூலம் அடுத்தடுத்து சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. மேலும் சில சீரியல்களிலும், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குப் பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட லாஸ்லியாவை காதலித்து வந்த நிலையில் இருவரும் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு பிரிந்து விட்டனர். வெளியில் வந்தவுடன் பட வாய்ப்புகள் இவர்களுக்கு கிடைத்த காரணத்தினால் அதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். எனவே தற்பொழுது கவின் லவ் செட்டாகாத காரணத்தினால் தனது வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.

கவி நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு லிப்ட் திரைப்படம் வெளியாகி இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து இவரோட நடிப்பில் வெளியான டாடா படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இதன் மூலம் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று வரும் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டில் பெரியவர்கள் பார்த்த பெண்ணை கவினுக்கு பிடித்து விட்டதாம் எனவே அவர் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று கவினுக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறி இருக்கும் நிலையில் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவலை  கவின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment