ஒரே நேரத்தில் மூன்று நடிகர்களுடன் விளையாடும் டிடி. வைரல் புகைப்படம் இதோ.

சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து இப்பொழுது சின்னத்திரை வெள்ளித்திரை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி ஓடுகிறார் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. முதலில் ரொம்ப கஷ்டப்பட்டு தொகுப்பாளர் பணியை பிடித்திருந்தாலும் தற்பொழுது அவருக்கென ஒரு நிரந்த இடத்தை கொடுத்துள்ளது விஜய் டிவி.

இந்த சேனலில் பல தொகுப்பாளர்களை வைத்திருந்தாலும் தனது செல்லப் பிள்ளையாக டிடியை வைத்துள்ளது காரணம் திவ்யதர்ஷினி எப்பொழுதும் தனது சிறந்த பேச்சாற்றல் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த டிடி இப்போதும் சில முக்கிய நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். டாப் நடிகர்களின் இசை வெளியீட்டு விழா, படத்தின் ரிலீஸ், சிறப்பு தொகுப்பு என சிறந்த நடிகர், நடிகைகளின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்துவார்.

இதனால் விஜய் டிவி அவரை விடாமல் தக்க வைத்துக் கொண்டுள்ளது இருப்பினும் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி அவ்வப்பொழுது சினிமாவுலகில் நடித்த வருவதுமாக வருகிறார். இதனால் சின்னத்திரை, வெள்ளித்திரை பக்கமா சுத்தி வருகிறார் நடிகை திவ்யதர்ஷினி. அதோட மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சினிமா நடிகைகள் போல அவ்வப்போது மீதி நேரங்களில்  நாம் எதிர்பார்க்காத பல புகைப்படங்களை அள்ளி வீசுவார்.

இதனால் திவ்யதர்ஷினியை பின்பற்றுவோரின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் சுந்தர் சியுடன் ஒரு புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார் இந்த படத்தில் ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி வருகின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இதற்கு இடையில் திவ்யதர்ஷினி ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் மற்றும் பல நடிகர், நடிகைகள் உட்கார்ந்து சீட்டுகட்டு விளையாண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை…

dd
dd
dd
dd

Leave a Comment