தனது ஸ்டைலில் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர் தனுஷ் – உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்.

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக பார்க்கப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் திரை உலகில் இதுவரை 168 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான். இப்பொழுதும் அவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருவதோடு..

தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டு ஓடுகிறார். அந்த வகையில் நெல்சன் திலீப் குமாருடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 169 திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அவருடன் கைகோர்த்து விநாயகன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த பல்வேறு இயக்குனர்களுடன் கைகோர்த்து நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் நேற்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் நண்பர் உறவினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் நேற்று ஜெயிலர் படக்குழு ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு..

டீசர் ஒன்றரை ரிலீஸ் செய்தது அதில் ரஜினி செம மாஸாக வந்துப்போன காட்சிகள் ரஜினியின் பிறந்தநாள் முன்னிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்தது. நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

தனுஷ் எப்பொழுதுமே ரஜினிக்கு நிறைய மரியாதை கொடுக்க கூடியவர்.  அது அவர் கூட இருக்கும் பொழுதும் இல்லாத பொழுதும் கொடுக்கக் கூடியவர் அந்த வகையில் நேற்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என ஒரே வார்த்தையில் வாழ்த்து சொல்லி உள்ளார். இந்த செய்தி ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட வைத்துள்ளது.

Leave a Comment