சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் நல்ல கதையை தேர்வு செய்து மெனக்கட்டு தனது திறமையை வெளிக்காட்டி நடித்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்த படம் தோல்வியை அடைவது வழக்கம் தான் ஆனால் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடினமாக உழைத்து தனது நடிப்பை மெருகேற்றி..
ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக மாறுகின்றனர் அந்த வகையில் நடிகர் தனுஷ் ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலும் பல அசிங்கங்களையும் சந்தித்தாலும், தோல்வி என்பது தற்காலிகமானது என்பதை நன்கு உணர்ந்து தொடர்ந்து தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வெற்றிகளை அள்ளி வருகிறார்.
அதனால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அண்மைக்காலமாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன், ஜகமே தந்திரம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இதில் தனுஷின் நடிப்பு மிரட்டும் வகையில் இருந்தது அதே போல் தான் மாறன் திரைப்படத்திலும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தாலும் கதைகளம்.
சற்று வீக்காக இருந்தால் இந்த படம் தோல்வியை தழுவியது இருப்பினும் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுக்க.. தற்போது சிறந்த இயக்குனருடன் கை கோர்த்துள்ளார் முதலாவதாக தனது அண்ணன் செல்வராகவன் உடன் கை கோர்த்தது நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதன் பின் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி வெற்றி படங்களை கொடுத்த அயராது பாடுபடுகிறார் இந்த நிலையில் நடிகர் தனுஷ் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று உலா வருகிறது. அதன்படி பார்க்கையில் தனுஷ் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 180 கோடி இருக்கும் என தெரிய வருகிறது. இது உறுதியான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரத்தல் பேசப்பட்டு வருகிறது.