மீண்டும் வாலுடன் களத்தில் இறங்கப் போகும் நடிகர் தனுஷ்..! தயாரிப்பாளர் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்..!

0

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை இயக்கி சிறந்த இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவ்வாறு வெளியான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கதிர் மற்றும் நாயகியாக கயல் ஆனந்தி நடித்திருப்பார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் மாரிசெல்வராஜ் இத்திரைப்படத்தின் மூலம் பல்வேறு புகழும் பாராட்டும் உருவானது. இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தாலும் இத்திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அந்தவகையில் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஜிஷா விஜயன் மற்றும் இதர கதாபாத்திரத்தில் யோகி பாபு, லால், கௌரி, பூராம் போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான கலைபுலி எஸ் தாணு அவர்கள்தான் தயாரித்திருந்தார் மேலும் இத்திரைப்படத்திற்கு தேனி ஈஸ்வரன் அவர்கள்தான் இசை அமைத்துள்ளார். இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் கெத்து காட்டி உள்ளது.

அந்தவகையில் இத்திரைப்படம் வெளியான உடனே இரண்டாம் பாகம் பற்றிய பேச்சு வார்த்தைகள் அதிகம் பேசப்பட்டன அதேபோல் தற்போது  ரசிகர்களின் கோரிக்கையின் படி இந்த இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை தற்போது கலைபுலி எஸ் தாணு அவர்கள் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

karnan-1
karnan-1

இவ்வாறு வெளிவந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக கர்ணன் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவது உறுதி என நினைத்து சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் இருந்து வருகிறார்கள்.