சமுத்திரகனியின் கதையில் நடிக்க மறுத்த நடிகர் தனுஷ்..! பல வருட ரகசியத்தை உடைத்த பிரபல தயாரிப்பாளர்..!

0
dhanush
dhanush

தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வளம் வருபவர்தான் நடிகர் சமுத்திரகனி. பொதுவாக இவருடைய திரைப்படங்கள் இளைஞர்கள் மட்டும் இல்லாமல் இல்லத்தரசிகளுக்கும் மிகவும் பிடிக்கும் ஏனெனில் அந்த அளவிற்கு தான் நடிக்கும் திரைப்படத்தில் பல்வேறு கருத்துக்களை  மக்களிடையே கூறுவார்.

பொதுவாக நடிகர் தனுஷ் செல்வராகவன் இவான் ஆகிய அனைவரும் ஒரு நெருங்கிய நண்பர்கள் மட்டும் அல்லாமல் ஒரு வெற்றி கூட்டணி என்று கூட சொல்லலாம் அப்பொழுது இவர்கள் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் உடன் தான் அதிக அளவு நேரத்தை கழிப்பார்கள்.

அந்த நேரத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு நடிப்பில் இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தை பார்க்க ஞானவேல் அவருடைய குழுவை அழைத்துச் சென்றாராம்.

அப்பொழுது இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனித்த தனுஷிடம் ஞானவேல் இவரை வைத்து ஒரு திரைப்படம் இயக்கலாம் என தனுஷிடம் கேட்டுள்ளாராம் அதற்கு தனுஷ் இது போன்ற கதை எனக்கு செட்டாகாது நானும் ரசிகர்களுடன் இணைந்து ரசிப்பேனே தவிர இந்த கதை கலம் எனக்கு செட்டாகாது என்று கூறிவிட்டாராம்.

ஆனால் இப்பொழுது இவர்கள் இருவருமே சினிமாவில் உயர்ந்த இடத்தில் தான் இருக்கிறார்கள் அதேபோல தனுஷ் நல்ல நடிகராகவும் சமுத்திரகனி நடிகர் மற்றும் நல்ல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் இணைந்து நடித்த விஐபி திரைப்படத்தில் கூட சமுத்திரகனி அப்பாவாக நடித்ததை பார்த்து நான் பெருமிதம் கொண்டேன் என தயாரிப்பாளர் ஞானவேல் அவர்கள் கூறியுள்ளார்.