தனது பெயரைக் கெடுத்துக் கொள்ளும் தனுஷ்!! செய்வது சரியில்லை என எச்சரிக்கும் தமிழ் சினிமா!!

0

தொடர்ந்து சில திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றதால் தற்பொழுது இந்திய சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக மாறி உள்ளவர்தான் நடிகர் தனுஷ்.இவர் நடிப்பில் வெளிவந்த அசுரன்,கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய ஒரு மாற்றத்தை தந்தது.

அந்தவகையில் இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி வழியாக வெளியானது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் படக்குழுவினர்கள் இயக்கிவுள்ள த கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் சின்ன சின்ன குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்பொழுது உள்ள பிரபல நிறுவனங்கள் பலவகை தனுஷை வைத்து திரைப்படங்களை தயாரிப்பதற்கு ரெடியாக இருக்கிறது.

அந்த வகையில் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும்  தனுஷ் மேலும் தெலுங்கிலும் நடிக்க உள்ளார். அந்தவகையில் தெலுங்கில் மட்டுமே இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் தனுஷ் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக உள்ள திரைப்படங்களில் இதற்கு மேல் இருமடங்காக சம்பளம் வாங்குவார் என்று கூறப்படுகிறது.

தனுஷ் சில மாதங்களுக்கு முன்பே தமிழில் சில படங்களில் நடிப்பதாக ஒப்பந்தமாகி விட்டு தற்பொழுது மற்ற மொழிகளிலும் அதே தேதியில் நடிப்பதாக ஒப்பந்தமாகியுள்ளார்.எனவே இதனை சரி இல்லை என்று தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தனுஷிடம் கூறிவருகிறார்கள்.

தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் டி 43 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து செல்வராகவன் இயக்க உள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது.

இவ்வாறு தொடர்ந்து தமிழ் நடிக்க கமிட்டாகிவுள்ள இவர் தெலுங்கிலும் 2022ஆம் ஆண்டு இவரின் திரைப்படங்கள் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளதால் தயாரிப்பாளர்கள் மற்றும் தனுஷுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.