முதல் முறையாக ஓரே படத்தில் மூன்று நடிகைகளுடன் இணையும் தனுஷ்..

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்த வருபவர் தான் நடிகர் தனுஷ். இந்திய அளவில் பிரபலமடைந்திருந்த இவர் தற்போது உலக அளவில் பிரபலமடைந்து ஏராளமான ரசிகர்களை வளைத்துப் போட்டுள்ளார்.  அதோடு தற்போது உள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என்று அனைவரும் போட்டி போட்டு கொண்டு தனுஷை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள்.

எனவே தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் தனுஷ் நடிக்க கமிட்டாகியுள்ளார்.அதோடு இவரின் சம்பளம் இரு மடங்கு உயர்ந்துள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக அசுரன்,கர்ணன்,ஜகமே தந்திரம் போன்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த மூன்று திரைப்படங்களும் சமூகத்திற்கு உரிய நல்ல கருத்து தரும் திரைப்படமாக அமைந்ததால் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படமாக மூன்றுமே தொடர்ந்து நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்பொழுது தனுஷ் உலகப் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் படக்குழுவினர்கள் தயாரித்துள்ள தி கிரே மேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது  கார்த்திக் நரேன் இயக்கி வரும் டி 43 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு மித்ரன் ஜவஹர் இயக்க உள்ள புதிய படமொன்றில் கமிட்டாகி உள்ளாராம். மித்ரன் ஜவஹர் யாரடி நீ மோகினி, குட்டி,உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்களில் முன்பே தனுசுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் தனுஷ் மற்றும்  மித்ரன் ஜவஹர் இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளாராம்.  அதோடு முக்கியமாக இத்திரைப்படத்தில் 3 நடிகைகள் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.