சமூக வலைதளம் என்று கூட பார்க்காமல் செல்வராகவனை வெறுப்பேத்தாத டா என்ற தனுஷ்..! இணையத்தில் வைரலாகும் டுவிட் இதோ..!

0

actor dhanush latest twit viral in social media: ஆறு வருடங்களுக்கு முன்பாக தனுஷ் மற்றும் செல்வராகவன் பேசிய ட்விட் ஆனது தற்போது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் மிக வித்தியாசமான கதைகளை திரைப்படமாக இயக்கிவரும் இயக்குனர்தான் செல்வராகவன்.

இவர் பிரபல நடிகர் தனுஷின் அண்ணன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அதுமட்டுமில்லாமல் தனுசை துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியதே நமது செல்வராகவன் தான். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தை இயக்கி தனக்கு ஒரு மிகப்பெரிய மார்க்கெட்டை அமைத்துக் கொடுத்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல்வேறு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனை படைத்தது. மேலும் தனுஷ் வைத்து புதுப்பேட்டை திரைப்படத்தை இயக்கி இருந்தார் இத்திரைப்படம் அப்போது சரியான ஹிட் கொடுக்காவிட்டாலும் தற்போது மிக பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆறு வருடங்களுக்கு முன்பாக செல்வராகவன் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார் அதில் தன்னுடைய கல்லூரியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்தார்.

dhanush-1
dhanush-1

இதற்கு நடிகர் தனுஷ் எப்பொழுதும் நீங்கள்தான் என்னுடைய முன்னோடி என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு  செல்வராகவன் உன்னிடம் ஏதாவது பள்ளி அல்லது கல்லூரி பற்றிய நினைவுகள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுள்ளார் அதற்கு நடிகர் தனுஷ் நான் எப்போ காலேஜ் போன ஸ்கூல் மட்டும் தான் போனேன் அதனால காலேஜ் வாழ்க்கை எப்படி இருக்குன்னு தெரியல என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த செல்வராகவன் ஸ்கூல் மாறி இல்ல காலேஜ் ஊர் சுற்றுவது செம்ம ஜாலியாக இருக்கும் அந்த வாழ்க்கையே வேற என கூரியிருந்தார். இவ்வாறு செல்வராகவன் சொன்னதை பார்த்து நடிகர் தனுஷ் வெறுப்பேத்தாத டா என கூறியிருந்தார். இவ்வாறு வெளியிட்ட பதிவானது சமூகவலைதளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

dhanush-2
dhanush-2