தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் தனுஷ் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமிபகாலமாக நடிகர் தனுஷ் முன்னணி இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தாலும் அவ்வபொழுது இளம் இயக்குனர்களுக்கு கைகொடுத்து தூக்கி வருகிறார்.
அதன் விளைவாக தற்போது இளம் இயக்குனர்கள் பலரும் தனுஷை வைத்து இயக்க ஆசைப்படுகின்றனர்.தனுஷ் தமிழில் கடைசியாக கர்ணன், ஜகமே தந்திரம் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் அதைத் தொடர்ந்து தற்போது மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் .
அதை முடித்த கையோடு தனுஷ் தொடர்ந்து தெலுங்கில் நான்கு படங்களில் நடிக்க இருக்கிறார். அதில் ஒரு படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா உடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஏன் இவரைப் பற்றி நாம் பேசுகிறோம் என்றால் குறைந்த படங்களையே இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் தேசிய விருது பெற்ற இயக்குனர் என்ற பெயரை தன்வசப்படுத்தி உள்ளார்.
இதுவரை அவர் டாலர் ட்ரீம்ஸ், ஃ பிடா, லீடர் உள்பட படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனுஷை வைத்து அவர் எடுக்கும் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த திரைப்படத்தை நாராயணதாஸ் நரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் போன்றோர் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தேர்வு செய்துவருகிறார் வெகு விரைவிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து வருகிறார். இந்த நிலையில் இந்த படம் குறித்து பேசிய சேகர் கம்முலா தனுஷை வைத்து நான் இயக்கும் படம் ஒரு திரில்லர் படமாக இருக்கும் இது பல மொழிகளில் உருவாக உள்ளது அடுத்த ஆண்டில் முதல் பாதியில் படப்பிடிப்பை துவங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.