ஜகமே தந்திரம் திரைப்படத்தின் கான்செப்ட் இதுதான் உண்மையை உடைத்த படக்குழுவினர்கள்.! வருத்தத்தில் ரசிகர்கள்.! வைரலாகும் தகவல்

0

சமீப காலங்களாக தனுஷ் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி  அடைந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன் இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக உள்ளது.

இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளது. எனவே விரைவில் நெட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஓடிடி வழியாக நேரடியாக  வெளியாகும் என்று கூறியுள்ளார்கள்.

இன்று காலை 10 மணி அளவில் தனுஷின் ஜகமே தந்திரம் ட்ரைய்லர்  வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ட்ரெய்லரை இந்த அளவிற்கு திரில்லராக இருந்தால் கண்டிப்பாக திரைப்படமும் மிகவும் சூப்பராக இருக்கும் என்று நினைத்து வந்த நிலையில் தற்பொழுது ட்ரைய்லரின்  பக்கத்திலேயே ஜகமே தந்திரம் திரைப்படம் எதை வைத்து உருவாகி உள்ளது என்ற கதையை கூறி உள்ளார்கள்.

அதாவது மதுரையை சேர்ந்த ரவுடி சுருளி. என்ற ஒரு ரவுடி லண்டன் நிழல் உலகில் ஆயுதம் கடத்தல், தங்கம் கடத்தல் போன்றவற்றால் எளிதில் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சிவதாஸ் கூட்டத்தில் ஊடுருவ அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக லண்டனிலுள்ள பெரிய அரசியல்வாதிகளோடு கூட்டி வைத்திருக்கும் பெரிய தாதா  பீட்டர்  என்பவரால் சுருளியை வேலைக்கு எடுக்கிறார்.

மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில் அவர்கள் வீடு என்று நினைக்கும் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டமே ஜகமே தந்திரம் திரைப்படத்தின் கான்செப்ட். இவ்வாறுதான் அந்த ட்ரைய்லரில் குறிப்பிட்டு இருந்தார்கள். எனவே இவ்வாறு ஒரு அருமையான திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என ரசிகர்கள் பெரிதும் வருத்தப்பட்டு வருகிறார்கள்.