ஏ ஆர் ரகுமான் இசையில் முதன்முறையாக பாடிய தனுஷ்!! பாராட்டும் ரசிகர்கள்.!! எந்த படத்தில் தெரியுமா..

actor dhanush first time singing in A.R.Rahman movie: நடிகர் தனுஷ் இந்தியில் அக்ஷய்குமார் மற்றும் இளம் நடிகையான சாரா அலி கானுடன் இணைந்து அட் ரங்கிரே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை சாரா அலிகான் ஆரம்பத்தில் மிகவும் தயங்கிய தாகவும் ஏனென்றால் இந்த திரைப்படத்தில் நடிக்கும் இரண்டு ஹீரோக்களுமே சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகை சாரா அலிகானுக்கு கொடுக்கப்பட்ட  கதாபாத்திரம் மிகவும் சவாலானதாக இருந்தது எனவே இதை எடுத்து நடித்து பார்க்க வேண்டும் என அவருக்கு ஆர்வம் தோன்றியதாக கூறியிருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை சாரா அலிக்கான்  இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தனுஷ் இந்தத் திரைப்படத்திற்காக ஏ ஆர் ரகுமான் இசையில் ஒரு பாடலை பாடியதாக அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை அறிந்த தனுஷ் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment