தமிழ் சினிமாவில் தனுஷை தூக்கிவிட்ட திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது கர்ணன் திரைப்படத்தில் நடித்துவருகிறார், தனுஷ் தற்பொழுது வளர்ந்துவிட்டாலும் அவர் ஆரம்ப காலத்தில் பல தோல்வி படத்தை கொடுத்துள்ளார். இந்த நிலையில் தனுஷை தமிழ் சினிமாவில் உயர்த்திய சிறந்த படங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. துள்ளுவதோ இளமை – கல்லூரி மாணவர்களின் ஆசை முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

2. காதல் கொண்டேன் – 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானது. அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகரான விருதுகளை பெற்றுள்ளார்.

3. திருடா திருடி – இத்திரைப்படத்தில் குடும்பம் மற்றும் அதிரடி படமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் நகைச்சுவை கலந்த திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

4. புதுப்பேட்டை – அரசியல் மற்றும் ரவுடிசம் பற்றி எடுத்துரைக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது. இதில் ஒரு சாதாரணமான இளைஞன் ரவுடியாக மாறி பின்பு அரசியலுக்கு நுழைவது என சுவாரஸ்யமான திரைக்கதையில் நடித்துள்ளார் தனுஷ்.

5. திருவிளையாடல் ஆரம்பம் – தனுஷ் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் காதல் மற்றும் காதலால் ஏற்படும் சர்ச்சைகள் என இவ்விரண்டையும் நகைச்சுவையாக நடித்து ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார்.

6.பொல்லாதவன் – தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய முதல் படம் பொல்லாதவன். ஒரு இளைஞன் இருசக்கர வாகனத்தின் மீது உள்ள உறவைப் பற்றிய படம்.

7. யாரடி நீ மோகினி – தனுஷ், நயன்தாரா, மற்றும் ரகுவரன் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் குடும்பத் திரைப்படம் ஆகும். திரைப்படத்தை தெலுங்கிலிருந்து டப்பிங் ஆக உருவாக்கி வெற்றி பெற்ற படமாகும்.

8.ஆடுகளம் – சேவல் சண்டை என சுற்றித்திரியும் ஒரு இளைஞனை பற்றி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைபெற்றது. அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிற்கு பல விருதுகளை பெற்று தந்தது.

9.வேலையில்லா பட்டதாரி – பொறியாளர் கல்லூரிகளில் படித்து வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களையும் நிலைமையைப் பற்றி கூறுவது இத்திரைபடம்.

10.வட சென்னை – தமிழ் நாட்டின் தலை நகரமான சென்னை அரசியலாலும், ரௌடிசத்தாலும் வர்த்தக ரீதியாகவும் பிரபலமானதை பற்றி எடுத்துரைத்த படமாகும்.

11.அசுரன் – இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார், இந்த திரைப்படத்தின் மூலம் தான் மஞ்சு வாரியார் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாகி பல விருதுகளை பெற்றது.

Leave a Comment