நடிகர் கிரேசி மோகனின் முதலாமாண்டு நினைவேந்தல்!! ஜூன் 10, சமூக வலைத்தளங்களில் கமல்ஹாசன் தலைமையில் நேரலையில்.!!

Actor Crazy Mohan’s first funeral anniversary on June 10 live on social media: கிரேசி மோகன் தமிழ் திரையுலகில் நடிகராகவும், வசன கர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தவர். நடிகர் கமலஹாசன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடிகர் கமலஹாசனின் பல திரைப்படங்களுக்கு கதை வசனகர்த்தாவாக பணியாற்றினார். இவர் கதை வசனங்களை முழுக்க முழுக்க நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்.

பின்னர் 1983இல் பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, அருணாச்சலம், தெனாலி, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், கொல கொலயா முந்திரிக்கா, நான் ஈ போன்றவையாகும்.

நடிகர் கிரேசி மோகன் கடந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி காலமானார். இதனை முன்னிட்டு கிரேசி மோகனின் ஓராண்டு நினைவு நாளை சிறப்பிக்கும் பொருட்டு உலகெங்கிலுமுள்ள 25க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் ஒன்றிணைகின்றன.

இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நேரலையில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்வில் திரைபிரபலங்கள் நாசர், பிரபு, குஷ்பு, கேஎஸ் ரவிக்குமார்,  சந்தானபாரதி, முனைவர் ஞானசம்பந்தன்,போன்றோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.

மேலும் ஜூன் பத்தாம் தேதி நடைபெறும் இந்த நேரலை நிகழ்வில் துபாய் பொன் மாலைபொழுது நண்பர்கள் குழுமத்தின் படைப்பாக்கத்தில் டோக்கியோ தமிழ் சங்கத்தின் ஆதரவில் கிரேசி மோகன் சிறப்பு நினைவு பாடலை கிரேசி மோகனின் நீண்டகால நண்பரான கமலஹாசன் வெளியிடுகிறார். கிரேசி மோகனின் நினைவேந்தல் கமலஹாசன் முன்னிலையில் நேரலையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment