விஜய் 66 படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் – வெளியிட்ட புகைப்படம்.!

தளபதி விஜய் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விடுவார் அந்த வகையில் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தளபதி 66 படத்தின் கதையை கேட்டு விட்டார் தெலுங்கு இயக்குனர் வம்சி சொன்ன கதை தளபதி விஜய்க்கு பிடித்த போகவே..

உடனடியாக இந்த படத்தின் பூஜை போடப்பட்டு தற்போது படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்திற்காக ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் ஒன்றும் போடப்பட்டுள்ளது.  தளபதி  66 திரைப்படம் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் விஜய் அண்ணன் தம்பியாக பல நடிகர்கள் நடிக்கின்றனர் குறிப்பாக இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து தமிழ் சினிமா உலகில் ஹீரோவாக நடித்து வெற்றி கண்ட நடிகர் ஷாம் இந்த படத்தில் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இது ஒரு உறுதிப் படாத தகவலாக இருந்து வந்த நிலையில் நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் தளபதி 66 படத்தின் கேமராவை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அதை உறுதிபடுத்தி உள்ளார். இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் நிச்சயம் தளபதி 66 படம்.

மக்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என ரசிகர்கள் கனவு காண ஆரம்பித்து உள்ளனர் ஏனென்றால் விஜயை தொடர்ந்து இந்தப் படத்தில் பல டாப் நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது அது தான் உண்மையும் கூட..

Leave a Comment