நடிகர் சின்ன கலைவாணர் விவேக்கின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.! வருந்தும் ரசிகர்கள்…

vivek
vivek

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர்’ நடிகர் விவேக் இவர் 1987 ஆம் ஆண்டு வெளியான மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமும் இருந்து வருகிறது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடைசியாக லெஜென் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜன்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு நடிகர் விவேக் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துவிட்டார். இவருடைய இறப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு காமெடி நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் விவேக் அவர்கள் ஒரு சிறந்த மனிதராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு அதிகாலை 4;35 மணிக்கு மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

விவேக் அவர்கள் இறந்து இரண்டு வருடங்கள் நிறைவடைவதை அவருடைய நினைவு நாளில் ரசிகர்கள் நினைவு கூர்ந்து அவருடைய புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள். மேலும் நடிகர் விவேக் அவர்கள் மண்ணை விட்டு சென்றாலும் அவர்கள் நினைவுகள் நம்மை விட்டு செல்லாது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று நடிகர் சின்ன கலைவாணர் விவேக்கின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.