தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து ஏராளமான புதிய நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக திரை பிரபலங்களை சிறப்பு விருந்தினராக தங்களது நிகழ்ச்சியில் வர வைப்பதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ஜீ தமிழ் சின்னத்திரையில் பேமஸான தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.விஜய் டிவிக்கு அடுத்ததாக ஜீ தமிழ் தான் சுவாரசியமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிக்கு நடிகர் பிரபுதேவா கெஸ்ட்டாக வந்துள்ளார். இது குறித்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தான் டான்ஸ் ஜோடி டான்ஸ் இது தொடர்ந்து சில ஆண்டு காலங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது புதிய போட்டியாளர்களை வைத்து தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 12 சாதாரண நடனம் தெரிந்தவர்கள் 12 திரைப் பிரபலங்களுடன் இணைந்து நடனமாட இருக்கிறார்கள்.இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகையான சினேகா, பாபா ஷங்கர், சங்கீதா ஆகியோர்கள் நடுவர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது 12 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அந்த போட்டியாளர்களுக்கு ஏற்ற 12 பிரபலங்களை தேர்ந்தெடுக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனரும், பிரபல டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவா பங்குப்பெற்று உள்ளார். அந்த நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது பிரபுதேவா பள்ளியில் அமர்ந்து படித்த பெஞ்சை எடுத்து வந்து சப்ரைஸ் கொடுத்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் அவருடைய பள்ளிப்பருவ நண்பர்களையும் அழைத்து வந்துள்ளனர்.
பிறகு பிரபுதேவா அந்த பெஞ்சில் தனது நண்பர்களுடன் அமர்ந்து கொண்டு சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் அதோடு தனது நண்பர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார் இது குறித்த வீடியோ தான் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Back To School 😍😍
DanceJodiDanceReloaded | Saturday and Sunday 8 PM#DanceJodiDance #DJD #djdreloaded #DanceJodiDanceReloaded #ZeeTamil #BabaBhaskar #Sneha #Sangeetha #prabhudeva #zeetamilpromo #promo pic.twitter.com/LshcbCzT4o
— Zee Tamil (@ZeeTamil) August 5, 2022