சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக வளம் வரும் பல்வேறு தம்பதிகளும் காதலித்துத் திருமணம் செய்து கொள்வது வழக்கம் தான் அந்த வகையில் அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா சினேகா என சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பாபி சிம்ஹா தமிழ்சினிமாவில் பல்வேறு திரை படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து ரசிகர்கள் கவரப்பட்டார்.
அந்தவகையில் இவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது வில்லனாக பல்வேறு திரைப்படத்தில் நடித்து மிரட்டி வருகிறார்.அந்த வகையில் இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும் போன்ற திரை படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து ஜிகர்தண்டா திரைப்படத்தில் தன்னுடைய வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டார் அந்த வகையில் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்தது.
அந்த வகையில் இவர் திருமணம் செய்துகொண்ட நடிகை ரேஷ்மியையும் பலருக்கும் தெரியும் இவர் தமிழில் ஆல்பம் என்ற திரைப்படத்தில் சுருதியின் தங்கையாக நடித்து இருப்பார் அதேபோல ஜெயம் ரவி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார் பின்னர் இனிது இனிது என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார்.
அவர் நடித்த இந்த திரைப்படத்தின் மூலமாக இளசுகளின் மனதை கொள்ளை அடித்தது மட்டுமில்லாமல் அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் உரிமி என்ற திரைப்படத்தில் பாபி சிம்ஹா உடன் இணைந்து நடித்ததன்மூலமாக இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் இந்நிலையில் இவருக்கு ஒரு அழகான மகளும் மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.