விளம்பரம் படுத்தி நி*** விக்கிறார்களே அது எதற்கு பலூன் ஊதி பறக்க விடுவதற்கா..! நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட பார்த்திபன்.!

0

தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனருமாக வலம் வருபவர் பார்த்திபன் இவர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், முதன்முதலில் புதிய பாதை என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர் இயக்கிய முதல் திரைப்படமே தேசிய விருது பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகமபதநி, பிள்ளை குட்டிக்காரன், என பல திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றியுள்ளார். நடிகர் பார்த்திபன் என்னதான் திரைப் படங்களில் நடித்திருந்தாலும் சமூக சிந்தனையாளர் என்பதை அவரின் திரைப்படம் அவரின் மேடைப்பேச்சு ஆகியவை உணர்த்தும்.

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகிய ஒத்த செருப்பு திரைப்படம் பார்த்தாலே அவர்  யார் என்பதை உணர்த்தும் அந்த அளவு அந்தத் திரைப்படம் பலரின் மனதில் இடம் பிடித்தது. இன்னும் நாட்டில் பல இடங்களில் பெண்களை கொடுமைப்படுத்துவதும் பிறந்த குழந்தையை சாலையோரங்களில் வீசிச் செல்லும் அவலம் நடைபெற்று வருகிறது.

தொலைக்காட்சி மற்றும் ரேடியோ மூலம் எத்தனையோ விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தினாலும் இன்னும் பலர் மாறாமல் இருப்பது மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது, இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் சமூக கருத்து மற்றும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைக்கு கருத்தை வெளியிடும் பார்த்திபன் தற்பொழுது ஒரு வீடியோவை வெளியிட்டு அனைவரையும் பதற்றமடைய வைத்துள்ளார்.

சாலை ஓரத்தில் ஒரு மூட்டை முடிச்சுக்கு உள்ளே பிறந்த குழந்தை ரோட்டோரத்தில் வீசப்பட்டுள்ளது, அதன் வீடியோவை தான் பார்த்திபன் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் நிரோத் உபயோகியுங்கள், நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள்-ன்னு ரேடியோவுல டீவியில விளம்பரப் படுத்துறாங்களே எதுக்கு?பலூன் ஊதிப் பறக்க விட்றதுக்கா?இந்த மாதிரி அனாதைகள் உருவாகாம இருக்கத்தான்!1989-புதிய பாதை வசனம்-பழசாகாம இன்னமும் பச்சக் குழந்தையாட்டம் ரத்தமும் சதையுமா கிடக்கு என பதிவிட்டுள்ளார்