சிறுத்தை புலி பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா !! வைரலாகும் டைட்டில் போஸ்டர்.!!பாராட்டும் ரசிகர்கள்..

actor babhie simha acting in prabhakaran biography movie seerum puli poster release: ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பெரிய அளவில் போராடியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். விடுதலைப் புலிகள் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி கையில் ஆயுதம் ஏந்தி இலங்கை அரசுடன் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தினார்.

மேலும் இவர் 2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தினரிடையே நடந்த இறுதிப் போரில் பிரபாகரன் காலமானார். எனவே இவரின் வாழ்க்கை வரலாற்றை  சீறும் புலி என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்தனர்.

இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் வெங்கடேஷ் குமார் அவர்கள் இந்த சீறும் புலி திரைப்படத்தை இயக்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பாபி சிம்ஹா அவர்கள் பிரபாகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கடேஷ் அவர்கள் இரண்டு பாகங்களாக எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இத் திரைப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பாபி சிம்ஹாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இந்த போஸ்டர் ரிலீசாகி வெளிவந்த தகவல் பொய் என உறுதி செய்தது.இதோ அந்த போஸ்டர்..

babhi-simha
babhi-simha
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment