தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் மற்றும் பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பாகி டிஆர்பி தொலைக்காட்சியாக வலம் வந்துகொண்டிருப்பது விஜய் டிவி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து ஷோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதோடு இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் அஸ்வின் குமார்.
இவர் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் சிவாங்கி மற்றும் புகழ் இவர்கள் செய்யும் சேட்டைகளினால் அஸ்வின் பெரிதளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டார்.
அஸ்வின் இதற்கு முன்பே ஆதித்ய வர்மா, ஓமன பெண்ணே உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார். அதன்பிறகு இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடியும் சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சமீபத்தில் இவரை ஹீரோவாக நடித்திருந்த திரைப்படம் என்ன சொல்ல போகிறாய்.
இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர் அதோட மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு அந்த திரைப்படம் இல்லாத காரணத்தினால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

திடீரென்று பல பட வாய்ப்புகள் கிடைத்து வந்த காரணத்தினால் அஸ்வின் ஓவராக தலைகணம் மேடையில் ஆடிக் கொண்டிருக்கிறார். அதாவது மேனேஜர் உதவியாளர் அனைவரையும் வைத்துவிட்டு காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே ரசிகர்கள் தொடர்ந்து பலன்களை போட்டு கலாய்த்து வரும் நிலையில் அஸ்வின் குமார் சில காலங்களாக வாயை மூடிக்கொண்டு அடக்கமாக இருக்கவேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம்.