முன்னணி நடிகைகளுடன் இணைந்த அசோக்செல்வன்.. அப்ப இந்த படம் சூப்பர் தான்..

0

வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அசோக்செல்வன். இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் சமீப காலங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அதோடு தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இவர் சூது கவ்வும்,தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றார். இதன் மூலம் பிரபலமடைந்துள்ள இவர் சமீபத்தில் வாணி பூஜன் ஆகிய திரைப்பிரபலங்கலுடன் இணைந்து நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் தான் ஓ மை கடவுளே இத்திரைப்படம் பெரிதளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்த வகையில் இத்திரைப்படம் நடிகர் அசோக் செல்வனின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படம் பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் ஹீரோவாக நடிக்க உள்ள இத்திரைப்படத்தை ஆர் கார்த்திக் இயக்க உள்ளார். அந்த வகையில் இத்திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக  ரீத்து வர்மா மற்றும் அபர்ணா முரளி நடிக்க உள்ளார்கள்.

இவர்களில் ரீத்து வர்மா நடிகர் விக்ரமுடன் இணைந்து துருவ நச்ததிரம் திரைப்படத்திலும், அபர்ணா முரளி சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.