தனது மகளுக்கு பெயர் வைத்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ஆர்யா.? பார்த்து வாழ்த்தும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து படிப்படியாக ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகர் ஆர்யா. பார்ப்பதற்கு செம வாட்டசாட்டமாக இருப்பதால் ஆக்சன் படங்களுக்கு செட் ஆகினார். மேலும் அவர் அழகை பார்த்து வெகுவிரைவிலேயே பெண் ரசிகர்கள் பலரும் அதிகமாக உருவாகினர்.

காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து ஆரம்பத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்தாலும் போகப்போக ஆக்ஷன் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதிலும் நல்ல வரவேற்பு உள்ளதால் தற்போது தொடமுடியாத உச்சத்தை தமிழ் சினிமாவில் அவர் எட்டியுள்ளார்.

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் அவ்வபோது ரியாலிட்டி ஷோ மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்துவது ஆர்யாவின் வழக்கம்.  இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததால் அதை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தி வெற்றி கண்டனர். மேலும் ஆர்யா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் பல்வேறு புரளிகள் கிளம்பின.

அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஆரியா கடந்த 2019ஆம் ஆண்டு நான் இளம் நடிகையான ஷாயிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். மேலும் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து அரங்கேறியது. இருவரும் சினிமாவில் நடித்து வந்தாலும் குடும்ப விஷயத்தில் சரியாக இருந்து வந்தனர்.

இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மகள்கள் தினத்தை ஒட்டி தனது மகளுக்கு பெயரை வைத்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் நடிகர் ஆர்யா.

arya and daughter
arya and daughter

Leave a Comment