பழனி படிக்கட்டை போல் தனது கட்டுகளை காட்டி இணையத்தை மிரட்டும் நடிகர் ஆர்யா..! அடேங்கப்பா ஹல்க்லாம் சைடு வாங்கணும் போல..!

actor arya latest movie look: திரை உலகில் பல எதிர்ப்புகளை சந்தித்து வருபவர்தான் இயக்குனர் பா ரஞ்சித் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் காலா. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.

பொதுவாக பா ரஞ்சித் தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை திரைப்படத்தில் திணித்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகுவதுமட்டுமல்லாமல் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம் தான்.

இந்நிலையில் நீண்ட காலமாக திரைப்படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கியிருந்த பா ரஞ்சித் சமீபத்தில் ஆர்யாவை வைத்து “சார்பட்டா பரம்பரை” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தற்சமயம் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது வெளிவந்து சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.  இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா பாக்ஸராக நடிக்க உள்ளாராம்.

மேலும் இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா தனது உடலை மிகவும் வருத்தி உடற்பயிற்சி செய்து பாடிபில்டர் போல காட்சி அளிக்கிறார். நடிகர் ஆர்யா சாதாரணமாகவே மிக கரடுமுரடான உடலமைப்பை உடையவர்.

ஆனால் தற்சமயம் இதைவிட மோசமாக தனது உடற்கட்டுகளை ஏற்றி உள்ளாராம்.  அந்த வகையில் சமீபத்தில் ஆர்யா வெளியிட்ட புகைப்படத்தால் இணையமே மிரண்டு போய் கிடக்கிறது.

இந்நிலையில் இன்று ஆர்யாவின் 30வது திரைப்படமான “சார்பேட்டா பரம்பரை” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் ஆர்யாவின் இப்படி ஒரு மோசான புகைப்படம் வெளிவந்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

aarya
aarya
aarya
aarya

Leave a Comment