விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 11 வாரங்கள் முடிவடைந்த நிலையில் 12 ஆவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அந்த வகையில் சினிமாவில் இருந்து பிரபல நடிகரான ஆரி கலந்து கொண்டுள்ளார்.
இவர் இதற்கு முன் நெடுஞ்சாலை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் பிரபலம் அடைந்தவர், அதன்பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட விரோதங்கள் தான் கிடைத்தது, ஆரி பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டு எப்பொழுதும் அறிவுரை தான் செய்து கொண்டிருக்கிறார் என சக போட்டியாளர்கள் அவரை உதாசீனப் படுத்துவார்கள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல ஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது.

மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமுறை நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஆரி தான் முதலிடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ஆதி நடித்துள்ள பகவான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. அப்படி இருக்கும் வகையில் ஆதி நடித்துள்ள மற்றொரு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இத்திரைப்படத்திற்கு அகலேகா என பெயர் வைத்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே பூஜையுடன் தொடங்கியது காதலர் தினத்தன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. இளம் ஜோடிகள் இருவரும் ஒரே போர்வைக்குள் படுத்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றரை வருடம் கழித்து இப்படி ஒரு பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த புகைப்படம் பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
