நடிகர் அருண் விஜய் மீது வைத்திருந்த மதிப்பும், மரியாதையும் இப்பொழுது மாறிவிட்டது..! அம்மு அபிராமி தடாலடி பேச்சு.

0
arun-vijay
arun-vijay

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களை வைத்து ஆக்சன் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஹரி. இவர் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் யானை இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் மற்றும் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருந்ததால் படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்க்காத அளவு வசூலை அள்ளியது. யானை படத்தில் ஒரு முக்கிய காட்சியில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான அம்மு அபிராமி நடித்து இருந்தார். இவர் ராட்சசன் மற்றும் கர்ணன் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர்.

இந்த நிலையில் சமீபத்தில் அம்மு அபிராமி அளித்த பேட்டி ஒன்றில் யானை படத்தில் நடித்தது குறித்து பேசி உள்ளார். அவர் கூறியது இவ்வளவு பெரிய படத்தில் எனக்கு ஒரு சின்ன பகுதியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம்.  முதலில் ஹரி சார் இயக்கத்தில் நடிக்க எனக்கு ஒரு சின்ன பயம் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஹரி சார் நடந்து கொண்ட விதத்தை பார்த்த பிறகு எனக்கு அந்த பயம் போய்விட்டது.

அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் மிக தன்மையாக நடந்து கொண்டார் குறிப்பாக பெண்களை மிகவும் மதிக்கக் கூடியவர். மேலும் அம்மு அபிராமி பேசியது இந்த படத்தில் அருண் விஜய் உடன் நடித்ததும் எனக்கு மிக்க மகிழ்ச்சி அவரை நான் ரவி அப்பா என்று தான் அழைப்பேன். நான் நடித்த ராட்சசன் திரைப்படம் வெளியான பொழுது நல்லா நடிச்சிருக்க வாழ்த்துக்கள் என்று அருண் விஜய் எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார்.

எனக்கு மெசேஜ் அனுப்பிய ஒரே ஒரு செலிபிரிட்டி இவர்தான் அப்போதியிலிருந்து இவர் மேல் எனக்கு மிகப்பெரிய ஒரு மரியாதை இருந்தது. தற்போது யானை படத்தில் அவர் உடன் இணைந்து நடித்த பிறகு அந்த மரியாதை பல மடங்கு அதிகரித்து விட்டது என அம்மு அபிராமி கூறியுள்ளார்.