எங்ககிட்டயும் இந்த படம் இருக்குனு நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம்.! அருண் விஜய்யின் மாசான டுவிட்..

தற்பொழுதெல்லாம் தமிழ் ரசிகர்கள் தமிழ் திரைப்படங்கள் இருக்கும் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் நல்ல ஆதரவை தந்து வருகிறார்கள்.  அந்த வகையில் இந்த வருடம் வெளியான பான் இந்தியன் படங்களான கேஜிஎப், ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

மேலும் இந்த திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வெற்றியைப் பெற்றது என்றும் கூறலாம்.  பல கோடி வரை வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த திரைப்படங்களை பார்த்து விட்டு ரசிகர்கள் தமிழில் மட்டும் ஏன் இந்த மாதிரி திரைப்படங்கள் வருவதில்லை தமிழ் சினிமா கீழே சென்று கொண்டிருக்கிறதா என பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

ஏனென்றால் இந்த திரைப்படங்களை விடவும் தமிழ் சினிமாவில் வெளியான எந்த திரைப்படமும் பெரிதாக வெற்றி பறவில்லை.  இவ்வாறு போய்க் கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் அப்படியே அனைத்தையும் மாற்றியுள்ளது.

ஏனென்றால் இது திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் கதை தமிழ் சினிமா மட்டுமின்றி அனைத்து மொழி திரை உலகையே மிரள வைத்துள்ளது.  அந்த வகையில் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

இப்பொழுது வரையிலும் பல திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க கமல் ஹாசன்,விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள்.  அனிருத் இசையமைத்திருந்தார்.

இவ்வாறு தமிழ் சினிமாவே இந்தப் படத்தைப் பாராட்டி வரும் நிலையில் அருண் விஜய்யையும் பாராட்டி பேசி வருகிறார்கள்.  அதாவது இது தொடர்பாக பேசிய அருண் விஜய் மற்ற மொழித் திரைப்படங்கள் எல்லாம் நல்லா ஓடும் போது தமிழ் அப்படி ஒரு படம் பெருசா அடி அடிக்கனும்னு எல்லாரும் கேட்டாங்க,  இப்ப நம்ம ” நெஞ்சை நிமிர்த்தி சொல்ல லாம் எங்க கிட்டயும் pan-india படம் போல ஒரு படம் இருக்குதுடா”. இவ்வாறு விக்ரம் திரைப்படம்  பான் இந்திய வழக்கமாக இருப்பது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கு பெருமை மற்றும் மிகப்பெரிய வெற்றி என கெத்தாக பேசியுள்ளார்.

Leave a Comment