அன்று விஜய் இடம் அடிவாங்காமல் தப்பித்த அர்ஜுன்.! ஆனால் இந்த முறை புரட்டி எடுக்க போகும் தளபதி.! வசமாக சிக்கிட்டாரே.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவருடன் பல திரை பிரபலங்களும் நடித்து வருகின்றனர். மேலும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா அவர்கள் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்து தற்போது சென்னையில் ஒரு சில பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் படத்திற்கான அறிக்கையை விரைவில் பட குழு வெளியிடும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் வில்லனாக நடிகர் பேச்சு வார்த்தை நடந்துள்ளதாகவும் அதில் அர்ஜுன் அவர்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அர்ஜுன் அவர்களை லோகேஷ் கனகராஜ் அவர்கள் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்க கேட்டுள்ளார் அதற்கு அர்ஜுன் அவர்கள் விஜய் இடம் அதிகமாக சண்டையிடுவது போலும் அடிவாங்குவது போல் அமைக்கப்பட்டு இருந்ததால் அந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு தளபதி 67 திரைப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் அவர்கள் அர்ஜுனிடம் கூறியுள்ளார். அதன் பிறகு இந்த படத்தில் அர்ஜுன் அவர்கள் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது ஏற்கனவே இந்த படத்தில் பிரித்திவிராஜ் மற்றும்  சஞ்சய் ஆகிய இருவரும் வில்லனாக நடிக்க உள்ளனர். இதனால் தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே சஞ்சய் தத் கே ஜி எஃப் படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதேபோல் தளபதி 67 திரைப்படத்திலும் மிரட்டுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் தளபதி 67 படத்திற்கு அர்ஜுனனை வைத்து வலுப்படுத்த உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதை அறிந்த விஜயின் ரசிகர்களுக்கு மேலும் சந்தோஷமாக இருக்கிறது.

Leave a Comment