நினைத்துகூட பார்க்கமுடியாத அளவிற்கு 110 கிலோவில் நடிகர் அரவிந்த்சாமி..! ரீஎண்ட்ரீகாக இத்தை கிலோ எடை குறைப்பா..?

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர் என்ற பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் மணிரத்தினம். அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது  என்னதான் தொடர்ச்சியாக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் தோல்வி திரைப்படங்களும் ஏராளமாக கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ஒரு சில திரைப்படங்கள் படுதோல்வி அடைந்துள்ளது. ஆனால் ஒரு காலத்தில் இவர் இயக்கத்தில் படம் நடிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் ஆசைப்பட்டார்கள் ஆனால் சில வருடங்களாக அவர் படம் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டார்.

இந்நிலையில் எப்படியாவது ஒரு மாபெரும் ஹிட்டு திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் எனும் நாவலை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படத்தில் உருவாகி வருகிறார்.

நடிகர் அரவிந்த் சாமியை சினிமாவிற்குள் அழைத்து வந்தது மணிரத்னம் தான் அந்த வகையில் இவர் தளபதி எனும் திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக அரவிந்த்சாமி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்து விட்டார்.

என்னதான் முட்டிமோதி நடித்தாலும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெறுவது கிடையாது அந்த வகையில் அரவிந்த் சாமிக்கு ஒரு நேரத்தில் தோல்வி திரைப்படங்களாக குவிந்தன இதனை தொடர்ந்து அவருக்கு ஒரு விபத்தும் ஏற்பட்டதன் காரணமாக 110 கிலோ எடைக்கு மேல் எடை ஏறிவிட்டது.

இந்நிலையில் அரவிந்த்சாமி கடல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்க மணிரத்னம் முடிவு செய்தார் இதன் காரணமாக அரவிந்த்சாமி  தன்னுடைய உடல் எடையை 15 கிலோ வரை குறைத்துள்ளார். இதன் காரணமாக அரவிந்த்சாமி கடல் திரைப் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இவ்வாறு மணிரத்தினம் அரவிந்த்சாமி உடன் இருக்கும் நட்பினை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

aravind samy
aravind samy

Leave a Comment