ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன அரவிந்த்சாமி. வெளியான மாஸ் புகைப்படம்

0

நடிகர் அரவிந்த்சாமி நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர், இவர் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் விஜய் தான் இயக்குகிறார்.

மேலும் படத்திற்கு தலைவி என பெயர் வைத்துள்ளார்கள் இந்த நிலையில் ஜெயலலிதாவாக  ஹிந்தி நடிகை நடிக்க இருக்கிறார், இந்த திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு ஜெயலலிதா குடும்பத்தில் பேசி சம்மதம் வாங்கிய பின்புதான் படப்பிடிப்பை தொடங்கி உள்ளது படக்குழு.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு என்றால் அது எம்ஜிஆர் தான், இந்த தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் அரவிந்த்சாமி, மேலும் தலைவி திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

இந்த நிலையில் அரவிந்த்சாமியின் புதிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.