‘அங்காடி தெரு’ மகேஷை ஞாபகம் இருக்கிறதா.! பறிபோன பட வாய்ப்புகள்.. தற்பொழுது அவருடைய பரிதாப நிலை

angadi theru
angadi theru

சினிமாவை பொருத்தவரை ஏராளமான நடிகர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து இருந்தாலும் அவர்களால் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெறுவது குதிரை கொம்பு தான். அப்படி ஒரு சில திரைப்படங்களின் மூலம் மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது சினிமாவை விட்டு விலகிய ஏராளமான பிரபலங்கள் இருக்கின்றனர்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் மகேஷ். இவர் அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நிலையில் இந்த படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அந்த அளவிற்கு மிகவும் எதார்த்தமாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் முக்கியமாக திருநெல்வேலி மக்களின் பேச்சி மற்றும் வாழ்க்கையை கண் முன் கொண்டு வந்தார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை அஞ்சலி நடித்திருந்த நிலையில் அங்காடித்தெரு திரைப்படம் தான் அஞ்சலியின் மார்க்கெட்டை சினிமாவில் உயர்ந்தது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு என தொடங்கி ஏராளமான திரைப்படங்களில் தற்போது வரையிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

மேலும் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் நிலையில் அதே படத்தில் நடித்த நடிகர் மகேஷின் நிலமை ‌ அப்படி இல்லை. படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு மொத்தமாக விலகிய மகேஷ் தற்போது வரையிலும் எங்கு இருந்து வருகிறார் என்பது கூட தெரியாமல் இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் அண்மையில் நடிகர் மகேஷ்  பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருந்தார். அதில் அவர் ஈட்டி, சுந்தரபாண்டி படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த கேரக்டர், மாயாண்டி குடும்பத்தார் என பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் தான் மிஸ் செய்து விட்டதாகவும் கூறினார்.

magesh
magesh

அங்காடித்தெரு படத்திற்கு பிறகு சினிமாவின் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும் எப்படி கதைகளை எடுக்க வேண்டும் என்று எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை அதனாலேயே என்னுடைய கேரியர் வீணாக போய்விட்டது என மிகவும் எமோஷனலாக பேசியது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.