புஷ்பா 2 திரைப்படத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடிகளா.? புடிச்சதை புளியங்கொம்பாய் புடிச்சிருக்காரு அப்புறம் எப்படி வாங்காம இருப்பாரு..

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் வெளியாகி சாதனை படைத்த திரைப்படம் தான் புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சுனில்,பஹத் பாசில்,ராஷ்மிகா மந்தனா போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தது மட்டுமல்லாமல் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆம் அதிலும் குறிப்பாக சாமி சாமி பாடல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்தது. இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் வெளிவராதா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு போஸ்டரை விட்டு ரசிகர்களிடையே பரவி வந்தது இதனை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 திரைப்படத்திற்காக எவ்வளவும் சம்பளம் வாங்கியுள்ளார் என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது ஏற்கனவே புஷ்பா திரைப்படத்தில் கம்மியாக தான் நடிகர் அல்லு அர்ஜுன் சம்பளம் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது ஆனால் புஷ்பா 2 திரைப்படத்திற்காக அல்லு அர்ஜுன் ரூ.85 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

allu arjun

மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் படத்தின் ரிலீஸ் தேதி எப்பொழுது வெளியாகும் எங்களுக்கு அது மட்டும் தெரிந்து விட்டால் போதும் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் புஷ்பா2 திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ய போகிறது என்றும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version