நடிகர் அஜித்தின் முக்கிய திரைப்படத்தில் நடித்துள்ளாரா நடிகர் விஜய் சேதுபதி.? இணையத்தில் வெளிவந்த வீடியோ.!

தமிழ் திரை உலகில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் அஜித் இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. மேலும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்த இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் விரைவில் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் ஆரம்பித்து விடும் என்றும் தகவல் கசிந்த நிலையில் பல ரசிகர்களும் இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் உருவாக வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்து வந்தார்கள். சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் டைட்டில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து பார்த்தால் நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் அவருக்கு திருப்புமுனையாக இருந்த திரைப்படங்களில் ஒன்றுதான் ஆழ்வார் கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகை அசின், நடிகர் விவேக் போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

மேலும் இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.இந்நிலையில் இந்த திரைப்படத்தில் வரும் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி புகைப்படம் இடம் பெற்றுள்ளது போல் இருக்கிறது அதனை பல ரசிகர்களும் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள்.

இது வரை நடிகர் அஜித்துடன் விஜய் சேதுபதி நடிக்காமல் இருந்தாலும் எப்படியாவது நடிகர் அஜித்துடன் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என பல ரசிகர்களின் ஆசையாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆழ்வார் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி புகைப்படம் தெரிவது போல் இருப்பதால் இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version