நடிகர் அஜித்தின் தந்தை”சுப்பிரமணியம்” அவர்கள் மரணமடைந்தார்.. சோகத்தில் குடும்பத்தினர்

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் சமூக அக்கரை உள்ள கருத்து, ஆக்சன், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 230 கோடி வெற்றி கண்டது.

இதனால் சந்தோஷமடைந்த அஜித் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க உடனே தனது 62 வது திரை படத்தில் நடிக்க ஓகே சொன்னார் முதலில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தை இயக்க இருந்தது ஆனால் அவர் சொன்ன கதை அஜித் மற்றும் லைகா நிறுவனத்திற்கு திருப்தி கொடுக்காததால்..

அவருக்கு பதிலாக தற்பொழுது வெற்றி இயக்குனர் மகிழ் திருமேனியை கமிட் செய்துள்ளது வெகுவிரைவிலேயே அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என கூறப்படுகிறது.  இதனால் நடிகர் அஜித் தற்பொழுது தனது ஷாலினி மற்றும் தனது குடும்பத்துடன் துபாய் சென்று பொழுதை கழித்து வருகிறார்.

அதன் புகைப்படங்கள் கூட பெரிய அளவில் வைரலான நிலையில் தற்பொழுது ஒரு செய்தி அஜித் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்து உள்ளது அதாவது அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால் இன்று காலை உடல் நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது அவருக்கு 84 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது அஜித் ரசிகர்களையும் தாண்டி திரை உலகில் இருக்கும் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. மேலும்  இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டுதீப் போல பரவி வருகிறது.

ajith and family
ajith and family

Leave a Comment