அர்த்த ராத்திரியில் வெளியான நடிகர் அஜித்தின் AK 62 பட டைட்டில்.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்து பல திரைப்படங்களில் பல விஷயங்களை கற்றுக்கொண்டு தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்த அடுத்த திரைப்படங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இந்த துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நல்ல நல்ல கருத்துக்கள் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த அளவிற்கு துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் அப்டேட் வெளிவராதா என காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்று நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு தற்பொழுது படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் அஜித் நடிக்க போகும் இந்த திரைப்படத்திற்கு விடாமுயற்சி என்று டைட்டில் வைத்துள்ளதால் ரசிகர்கள் பலரும் தற்பொழுது இதனை கொண்டாடி வருகிறார்கள்.

பொதுவாகவே நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்றால் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆரவாரம் செய்து விடுவார்கள். இணையதளம் முழுவதும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகமாக வைரலாகி வருவதை நாம் காண முடியும்.

அதே போல் தற்பொழுது இந்த விடாமுயற்சி டைட்டில் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் தலைப்பே வித்தியாசமாக இருப்பதால் படமும் வித்தியாசமாக ரசிகர்களுக்கு கொடுக்க நடிகர் அஜித் முடிவு எடுத்துள்ளார் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment