டப்பிங் பணியில் ஈடுபட்டு வரும் நடிகர் அஜித்.! வைரலாகும் புகைப்படம்..

ajith-thunivu
ajith-thunivu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 2023ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை எச் வினோத் இயக்க  போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் இந்த படம் வங்கிக் கொள்ளையனை மையமாக வைத்து உருவாகி இருப்பதாகவும் மேலும் இது உண்மையில் நடந்த கதை சம்பவத்தை வைத்து தான் உருவாகி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் மஞ்சு வாரியார் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மேலும் சமுத்திரக்கனி, ஜி.எம் சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கோக்கன் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் இந்த படத்தினை தமிழ்நாடு வெளியிட்ட உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாணம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய தகவலை வெளியாகியிருக்கிறது தொடர்பான புகைப்படங்களை சோசியல் மீடியாவிலும் பட குழுவினர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். இவருக்கு முன்பு நடிகை மஞ்சு வாரியார் டப்பிங் பணியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ajith thunivu
ajith thunivu

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் பணிகளை முடித்துவிட்டு அடுத்ததாக நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் திரைப்படத்தில் இணைய இருக்கிறார். மேலும் அதற்கான பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.