காதல் மனைவியுடன் சைக்கிளிங் சென்ற நடிகர் அஜித்.. லைக்குகளை அள்ளி குவிக்கும் புகைப்படம்

Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வரும் அஜித் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள விடாமுயற்சி.

படத்தில் நடிக்க போவதாக அஜித்தின் பிறந்தநாள் ஆன மே ஒன்றாம் தேதி அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டது. சொல்லி இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் வெளி வராததால் படம் ட்ராப்பானது இணையதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் லைகா தலைவர் சுபாஷ்கரன் அஜித்தின் விடாமுயற்சி படம்..

எங்களுக்கு மிகப்பெரிய ப்ராஜெக்ட் வெகு விரைவிலேயே தொடங்கும் என சொல்லி அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் அஜித்தும் தற்பொழுது பைக் டூர் எல்லாம் முடித்துவிட்டு சென்னை திரும்பினார். திடீரென நடிகர் அஜித் தனது மனைவி மற்றும் சென்னையில் உள்ள பள்ளி குழந்தைகளுடன் சைக்கிளிங் செய்தார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்க்க பல ரசிகர்கள் அங்கு குவிந்தனர் அவர்களுடனும் நடிகர் அஜித்  ஜாலியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். சைக்கிளிங் முடித்த பிறகு தனது காதல் மனைவிக்கு தண்ணீர் கொடுக்கும் புகைப்படம் போன்றவையும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தன.

Actor ajith
Actor ajith

இதை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு வயசானாலும் உங்களுக்கு இருவருக்கும் இடையே இருக்கும் காதல் குறையவே இல்லை எனக் கூறி கமெண்ட் அடித்து அந்த புகைப்படங்களை பரப்பி வருகின்றனர் இதோ அஜித் ஷாலினி மற்றும் மாணவ மாணவிகள் இருக்கும் அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

Actor ajith
Actor ajith
Actor ajith
Actor ajith

Leave a Comment