தல நடித்ததில் டாப்பு டக்கர் படம் என்றால் இந்த 10 திரைப்படங்கள் தான்.! இதோ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தல அஜித். இவர் சினிமாவையும் தாண்டி துப்பாக்கி சுடுதல், பைக்ரேஸ் உட்பட இன்னும் பலவற்றிலும் தனது கவனத்தை செலுத்தி வருவதால் தற்போது உள்ள இளைஞர்களின் ரோல் மாடலாக திகழ்கிறார்.

எனவே இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகளவில் இருப்பதால் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று விடும்.  அந்த வகையில் இவர் நடிப்பில்  இறுதியாக நேர்கொண்டபார்வை திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இத்திரைப்படம் வெளியாகி ஒரு வருடங்களுக்கு மேலாகியும் தற்போது வரையிலும் அஜித் நடிப்பில் எந்த திரைப்படமும் ரிலீஸ் ஆகாத காரணத்தினால் ரசிகர்களை பெரும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் அஜித் ஒரு வருடத்திற்கு மேலாக வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் மட்டும் வெளிவந்து கொண்டிருந்தது.

எனவே ரசிகர்கள் போகுமிடமெல்லாம் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று போராடி வந்தார்கள்.அந்த வகையில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீமா குரோஷி  நடித்து வருகிறார் என்றும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்து விட்டதாகவும் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறி இருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது தல அஜித் தனது 61வது திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்த உள்ளதாகவும் இத்திரைப்படத்தை வினோத் இயக்க உள்ளதாகவும் தயாரிப்பாளர் யார் என்று இன்னும் அதிகாரபூர்வமாக முடிவு செய்யவில்லை என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தல அஜித் சினிமாவிற்கு அறிமுகமாகி பல திரைப்படங்கள் நடித்துள்ளார். ஆனால் 10 திரைப்படங்கள் மட்டுமே மிகவும் சிறந்த திரைப்படங்கள் என்று  Imbd தகவல் படி கூறப்படுகிறது.

வாலி

மங்காத்தா

அமர்க்களம்

முகவரி

தீனா

பில்லா

சிட்டிசன்

என்னை அறிந்தால்

காதல் மன்னன்

வரலாறு

Leave a Comment

Exit mobile version