17 வயதில் கல்லூரியில் இணையாமல் கதாநாயகியாக நடிக்கும் நடிகர் அஜித்தின் ரீல் மகள்.!

0
anika
anika

அஜித் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்களில் தொடர்ந்து அவருடைய மகளாக நடித்து வந்ததால் அஜித்தின் ரீல் மகள் என அனைவராலும் அழைக்கப்படுபவர் தான் நடிகை அனிகா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது தொடர்ந்து சோசியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய 17 வயதிலேயே கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

இவ்வாறு சின்ன வயதிலேயே இவர் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது பாராட்டப்பட்டாலும் படிக்கிற வயதில் இதெல்லாம் தேவைதானா என பலரும் திட்டி வருகிறார்கள்.மேலும் இவர் சோசியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சியில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டு இருந்த சிலுக்கு சுமிதா போன்ற நடிகைகளை ஓவர் டேக் செய்து விடுவார் போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதாவது இயக்குனர் கௌதமேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் என்னை அறிந்தால் இந்த திரைப்படத்தில் திரிஷா அஜித் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். மேலும் இதில் அனிகா சுரேந்திரன் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானார். இதனைத் தொடர்ந்து அஜித் மற்றும் நயன்தாரா கூட்டணி வந்த விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மனிதன் பிறகு தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மாமனிதன் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழை தொடர்ந்து மலையாளத்திலும் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடர்ந்தார்.

இந்நிலையில் இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தற்பொழுது ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.இந்த திரைப்படம் மலையாளத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது பள்ளி முடித்துவிட்டு கல்லூரியில் படிக்காமல் தற்பொழுது கதாநாயகியாக நடிப்பதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.