அஜித்தை விமானநிலையத்திலும் விட்டுவைக்காத ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்

திரையுலகை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் வங்கி கொள்கையை மையமாகக் கொண்டு ஏகே 61 திரைப்படம் நடித்து வருகிறார். அந்தத் திரைப்படத்திற்கு சென்னை மவுண்ட் ரோடு வங்கி போன்று 9 ஏக்கரில் பிரம்மாண்ட அளவில் செட் செய்து அதில் பலத்த பாதுகாப்புடன் அஜித் நடித்து வருகிறார். இதில் அஜித் இரண்டு வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏகே 61 திரைப்படத்தில் ஒரு மாதமாக அஜித் மட்டுமே நடித்து வருகிறார். அந்த நிலையில் சமீபத்தில் வீரா, சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து வந்தார்கள் இதில் அஜித்துக்கு ஜோடியாக நடக்க இருக்கும் மஞ்சு வாரியர் இதுவரை ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை. வெள்ளை தாடியுடன் ஒரு லுக் இளமையான ஒரு லுக் என இரண்டு லுக்கில் அஜீத் நடித்து வருகிறார் காலேஜ் ஃரொஃபோசா் ரோலில் அஜித் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 35 நாட்களாக நடந்து வந்த ஏகே 61 படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை முடித்து விட்டு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யுமாறு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். அதற்காக முழு வீச்சில் படத்தின் சூட்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏகே 61 திரைப்படத்தில் 2 பாடல்கள் உள்ளதாம் ஆனால் இதுவரையும் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே படமாக காட்டப்பட்டுள்ளது.

எனவே, அஜித் விமான நிலைய பணியாளர்களுடன் சாதாரணமாக நின்று பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் எடுத்த போட்டோ இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சிம்பிளாக வெள்ளை ஷர்ட், பேன்ட் அணிந்து கண்ணில் கூலிங் கிளாஸ் போட்டு இருக்கிறார். என்று அஜித் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். இந்த போட்டோவை பார்த்து மனுஷன் என்ன அழகா இருக்காரு பாருங்க என்று பாராட்டி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ஏகே 61 படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ உடலை குறைத்து வந்தார் என்று கூறப்படுகிறது. அஜித் சமீபத்தில் சூட்டிங்கை முடித்து ஹைதராபாத் வந்தபோது விமான நிலைய ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஹேக்ஸ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது. இதைத்தொடர்ந்து ஏகே 61 திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டு வருகிறார்கள்.

Leave a Comment